313. இப்படை வென்றால் கிரிக்கெட்டுக்கு அவமானம்!
நேற்று நடந்த இந்தியா-பங்களாதேஷ் ஆட்டத்தை வைத்துத் தான் இந்த தலைப்பு வைத்தேன்! தோற்பதும், வெல்வதும் விளையாட்டில் சகஜம் என்றாலும், தோல்வியைத் தழுவும் விதம் கூட கௌரவமாக இருத்தல் அவசியம். The manner in which our star-studded (actually, this is a sponsor created status 'star' status!) team lost to a lowly Bangaladesh side is mortifying, to say the least, to our national spirit :(
புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளத்தில், எதிரணியை ஆட வைப்பது பொதுவாக கடைபிடிக்கப்படும் ஒன்று. இதனால், ரிஸ்க்கைக் குறைக்கலாம்! ஆனால், டாஸ் வென்ற திருவாளர் கேப்டன் திராவிட், முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது, பின்னெரி (backfire!) விளைவை ஏற்படுத்தியது. சேவாக்கை உலகக் கோப்பைக்கு கூட்டிச் சென்றதே தவறு என்று நான் கூற மாட்டேன்! அவர் ஒரு proven match winner! ஆனால், முதல் ஆட்டத்திலேயே, அவரை துவக்க ஆட்டக்காரராக இறக்கி, அவர் ஆட்டமிழந்து, அதனால், எதிரணியின் கை ஓங்கியதை தவிர்த்திருக்கலாம். சேவாக்கை மிடில் ஆர்டரில் இறக்கி, இழந்த நம்பிக்கையையும், ·பார்மையும் அவர் திரும்பப் பெற வாய்ப்பளித்திருக்க வேண்டும்!
நான் எழுத நினைத்த வேறு சில விஷயங்களை, மனிகண்டன் ஏற்கனவே எழுதி விட்டார். எது எப்படியிருப்பினும், இது ஒரு மிகக் கேவலமான தோல்வி!!! டிராவிட்டும் இத்தோல்வியை 'worst defeat' என்று தான் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, 'டிராவிட்' என்ற பெயருடன் அவர் இருப்பதால் தான், அவரைப் பற்றி எதிர்மறை விமர்சனம் செய்கிறேன் என்று 'திராவிடத் தமிழர்கள்' சண்டைக்கு வர வேண்டாம் ;-)
ஒரு கட்டத்தில், 4 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுக்களை இழந்த ஒரு அணி வெற்றி பெறுவதற்கு தகுதியற்றதாகி விடுகிறது!!! இந்தியா இன்னும் ஒரு நாற்பது ரன்கள் எடுத்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும், அதாவது, பந்து வீச்சாளர்கள் முதலிலிருந்தே நம்பிக்கையுடன் பந்து வீசியிருப்பார்கள் என்பதை வைத்தே இதைச் சொல்கிறேன்! பங்களாதேஷ் பேட்ஸ்மன்களும் இறங்கி அடிக்க யோசித்திருப்பார்கள் இல்லையா?
அடுத்து, பங்களாதேஷ் 192 என்ற இலக்குடன் களமிறங்கியபோதாவது, டிராவிட் சற்று மூளையை உபயோகித்திருக்கலாம்! நம்மிடம், 'brain'-ம் இல்லை, அயர்லாந்துக்கு வாய்த்தது போல் ஒரு Neil-O-Brein-ம் இல்லை! (பாகிஸ்தானியரை நேற்று வூட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணியின் உண்மையான நட்சத்திர ஆட்டக்காரரான இவர், மொத்த 132 ரன்களில் 72 ரன்கள் எடுத்தார்!) சற்றுக் குறைவான total-ஐ defend செய்யும்போது, பந்து வீச்சில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்து, பேட்ஸ்மன் செட்டில் ஆக விடாமல் செய்ய வேண்டும். முக்கியமாக, சச்சினையும், சேவாக்கையும் சற்று முன்னரே பந்து வீச அழைத்திருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
எனக்கென்னவோ, பங்களாதேஷ் பந்து வீச்சை சமாளிக்கவே இப்படித் திணறும் நாம், இலங்கைக்கு (முரளி, ஜெயசூரியா, வாஸ்) எதிராக என்னத்த கிழிக்கப் போகிறோம் என்று புரியவில்லை. அதனால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது! அப்படியே நாம் கஷ்டப்பட்டு வென்றாலும், நமது சராசரி ரன்ரேட்டும், நாம் அடுத்த சுற்றுக்குச் செல்ல முக்கியமாகிறது! இந்தியா இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று நாமெல்லாம் (retrospectively) விமர்சனம் செய்வது சரியா என்ற கேள்வி தொக்கி நிற்பினும், நாம் கூறும் சில சாதாரண விஷயங்கள் கூட ஒரு தேசிய அணியின் கேப்டனும் அணி மேனேஜ்மெண்ட்டும் யோசிக்க மாட்டார்களா என்றெண்ணும்போது அயற்சியாகவே உள்ளது!!!
இறுதியாக, பாக் தோல்வியைப் பற்றி சில எண்ணங்கள். 1992-இல் உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு முதல் சுற்று ஆட்டத்தில், 70 சொச்ச ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை வந்து அவ்வணியைக் காத்து அரை இறுதி சுற்றுக்குச் செல்ல உதவியது. அந்த ஆட்டத்தில் தோற்றிருந்தால், பாகிஸ்தான் அணி போட்டியை விட்டு வெளியேறியிருக்கும்! அப்புறம் நடந்தது வரலாறு! அந்த சரித்திரம் நேற்று ஏடாகூடாமாகத் திரும்பியது!!!
அதே மழை, நேற்று நடந்த பாக்-அயர்லாந்து ஆட்டத்தின்போது, பாகிஸ்தானுக்கு பாதகமாக அமைந்து விட்டது. 132 என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, 81-4 என்ற நிலையில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறது, மேட்ச் நடைபெறாமல் போயிருந்தால் கூட, டக்வொர்த்-லூயி முறைப்படி, அயர்லாந்து வென்றிருக்கும்! அயர்லாந்துக்காரர்கள் அப்போதே குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! என்ன மேட்டர் என்றால், அந்த கட்டத்தில், ஆட்டத்தின் டெம்போ பாகிஸ்தானுக்கு எதிராகத் திரும்ப, வருண பகவான் காரணமானார் :)
மழை நின்று, ஆட்டம் மீண்டும் நடந்து, அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட புது வெற்றி இலக்கை அடைந்தது என்பது வேறு விஷயம்! This is perhaps the greatest UPSET in ODI history, according to me! (Better than Zimbabwe beating Australia way back in 1983, when WE won the World Cup!) உண்மையைக் கூறப் போனால், பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதியிழந்து, இப்படி அவமானத்துடன் வீடு திரும்புவதில் எனக்கு துளியும் மகிழ்ச்சி கிடையாது! மேலும், பாகிஸ்தான் தகுதி பெறாத நிலையில், இந்தியாவும் (துரதிருஷ்டவசமாக!) சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டால், உலகக் கோப்பை கிரிக்கெட், மிக நிச்சயமாக, ஜொலிப்பையும், பார்வையாளர்களையும், அதனால் விளம்பரத்தையும் இழந்து விடும் என்பது நிதர்சனம் :(
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 313 ***
10 மறுமொழிகள்:
Test comment !
//எனவே, 'டிராவிட்' என்ற பெயருடன் அவர் இருப்பதால் தான், அவரைப் பற்றி எதிர்மறை விமர்சனம் செய்கிறேன் என்று 'திராவிடத் தமிழர்கள்' சண்டைக்கு வர வேண்டாம் ;-) //
திராவிட் பார்ப்பான்தானாம்.நானும் ஒரு ஸ்மைலி போட்டுக்கறன் :)
""""மேலும், பாகிஸ்தான் தகுதி பெறாத நிலையில், இந்தியாவும் (துரதிருஷ்டவசமாக!) சூப்பர் எட்டு சுற்றுக்குத் தகுதி பெறாவிட்டால், உலகக் கோப்பை கிரிக்கெட், மிக நிச்சயமாக, ஜொலிப்பையும், பார்வையாளர்களையும், அதனால் விளம்பரத்தையும் இழந்து விடும் என்பது நிதர்சனம் :(""""
இது கண்டிப்பாக நடக்க வேண்டும்..அப்போதாவது நமது கிரிக்கெட் சுயபரிசோதனைக்கும் மாற்றத்திற்கும்,ப்ரொஃபஷனலிசத்துக்கும்( பணம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், விளையாடுவதிலும்) மாறுகிறதா பார்ப்போம் :)
பாலா,
நீங்க சொல்ற எல்லாம் சரி தான். டாஸ் வின் பண்ணி பேட்டிங் எடுத்தது, ஷேவக்கை ஒப்பனிங் இறக்கினது,....
ஆனா ஒரு போட்டில நடந்ததை வச்சு முடிவு பண்ணலாமா? போன பநிற்சி போட்டில மேற்கிந்தியத்தீவுகள் இதே இந்தியாவுக்கு எதிரா தான் 85க்கு அவுட்டாச்சு, நியுசிலாந்துக்கு எதிரா இங்கிலந்து 3 ரன்ல 4 விக்கெட் குடுத்துச்சு, ஆஸ்திரேலியாவும் நியுசிலாந்துக்கு எதிரா 140க்கு சுருண்டது. தென்னாப்பிரிக்க அயர்லாந்துக்கு எதிர 90/7ல இருந்து மீண்டு வந்தது. ஆக ஒரு மோசமான் தோல்லியை வச்சு முடிவு பண்ணனும்னா
எப்படை வென்றாலும் கிரிக்கெட்டுக்கு அவமானம் தான்.
நாளைக்கு பெர்முடாகிட்டயோ இலங்கை கிட்டயோ இந்தியா மீண்டும் அப்படி ஆடிச்சுன்னா, இதை சொல்லலாம். இப்பவே வேணாமே..
Sankar,
THis is a BIT 3 MUCH !!
Mani,
I am also a big fan of Indian cricket ! Let us hope and pray :)
http://thoughtsintamil.blogspot.com/2007/03/2.html
// எனக்கென்னவோ, பங்களாதேஷ் பந்து வீச்சை சமாளிக்கவே இப்படித் திணறும் நாம், இலங்கைக்கு எதிராக //
இந்த இடத்தில் பெர்முடாவை விட்டுவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மற்றதை பெர்முடா வெற்றிக்கு பின் பேசுவோம்.
முகமூடி,
வருக, வருக :)
வந்தாலே குசும்பு தானா ?? :)
நமக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு, நாம qualify ஆவோம்னு, பார்க்கலாம் !
என்ன, ரொம்ப நாளா ஆளக் காணோம் ? வேலைப் பளுவோ ?
அப்பப்ப ஆஜராகி, கமெண்ட் போடுங்க, பாஸ் !
அப்ப தானே நம்ம பதிவுலே ஒரு கலகலப்பு இருக்கும் ;-)
(Like good old days :)))
எ.அ.பாலா
Strong words against team India ...
Test comment !
Post a Comment